வடக்கு, கிழக்கில் 6,500 பேரை காணவில்லையென முறைப்பாடு

வடக்கு, கிழக்கில் 6,500 பேரை காணவில்லையென முறைப்பாடு

வடக்கு, கிழக்கில் 6,500 பேரை காணவில்லையென முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 7:42 am

வடக்கு,  கிழக்கில் 6,500 பேர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர்கள் காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் முன்வைத்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேல் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கூறினார்.

இந்த காலப்பகுதியில் 4,500 இராணுவத்தினர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவுபெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்