போதைக்கு அடிமையான 1000 பேருக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

போதைக்கு அடிமையான 1000 பேருக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

போதைக்கு அடிமையான 1000 பேருக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 9:15 am

போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகும் ஆயிரம் பேருக்கு வருடாந்தம் புனர்வாழ்வளிப்பதற்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

பொலன்னறுவை புனர்வாழ்பு முகாமில் இந்தக் குழுவினருக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் குணதிலக்க குறிப்பிட்டார்.

தற்போது போதைப்பொருள் பழக்கத்திற்குள்ளான 275 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் பழக்கத்திற்குள்ளான வேறுபட்ட வயதினர் கைதுசெய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜகத் குணதிலக்க கூறினார்.

தற்போது 15 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை, நாட்டின் மனித வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேலும் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்