பாகிஸ்தான் நிதானமான ஆட்டம்; முதல் இனிங்ஸ் நிறைவு

பாகிஸ்தான் நிதானமான ஆட்டம்; முதல் இனிங்ஸ் நிறைவு

பாகிஸ்தான் நிதானமான ஆட்டம்; முதல் இனிங்ஸ் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 1:53 pm

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்றுவரும் இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று முதல் இனிங்ஸில் பாகிஸ்தான் தனது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

யுனிஸ் கான் மற்றும் மிஸ்பா வுல் ஹக் ஆகியோர் சதம் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தனர்.

யுனிஸ் கான் 136 ஓட்டங்களையும், மிஸ்பா வுல் ஹக் 135 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை பந்து வீச்சில் ரங்கன ஹேரத், சமிந்த எரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழத்தினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இனிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஜுனைட் கான் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியினை விட 179 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ள இலங்கை, தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்