தோட்டத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது – கரு

தோட்டத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது – கரு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 10:48 am

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் நேற்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போது தலைமைத்துவ சபையின் உறுப்பினர்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்

ஊடகயவியலாளர் :-
தற்போது எதிர்க்கட்சி ஜனாதிபத் தேர்தலுக்கு தயாரா? யார் வேட்பாளர்? பொது வேட்பாளாரா?

கரு ஜயசூரிய :-
ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும். இல்லாவிட்டால் சரத் பொன்சேகாவை நிறுத்தியது போன்று ஐக்கிய தேசியக கட்சியின் பூரண அனுசரனையின் கீழ் தேர்தல் வரும் போது ஒருவர் முன்நிறுத்தப்படலாம்.

ஊடகயவியலாளர் :-
இது தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளீர்களா?

கரு ஜயசூரிய :-
ஆம் கடந்த தினங்களில் சந்திரக்காவை முன்நிறுத்தப் போவதாக பேசப்பட்டது. மங்கள சமரவீரவின் தோட்டத்தில் இருந்து 11 நிமிடங்கள் அவருடன் கதைத்தார். நானும் 20 நிமிடங்கள் கதைத்தேன், தோட்டங்களில் இருந்துகொண்டு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்