தேர்தல்கள் செயலகம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

தேர்தல்கள் செயலகம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

தேர்தல்கள் செயலகம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 8:25 pm

தேர்தல்கள் செயலகத்திற்கு நாளை சமூகமளிக்குமாறு சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுகளுடன் கலந்துரையாடுவதே அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

அரசியல் கட்சிகளை பதிவுசெய்வது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார்.

அத்தாட்சிபடுத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடு குறித்தும் கட்சிகளின் செயலாளர்களுக்கு இதன்போது விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

சொத்துகள், பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத பிரதிநிதிகள் குறித்தும் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்