தனியார் பஸ் சேவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஸ்கைப், தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தனியார் பஸ் சேவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஸ்கைப், தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தனியார் பஸ் சேவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஸ்கைப், தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 7:27 am

தனியார் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 071 6 55 00 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு மாகாணத்திலும் இடம்பெறும் பஸ் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

நாளாந்தம் காலை 8.30 முதல் 4.30 வரையான காலப்பகுதியில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தனியார் பஸ்கள் மற்றும் அதன் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும்பொருட்டு ஸ்கைப் மூலமான சேவை ஒன்று தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

பஸ்களில் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, சிறந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கமைய, private transport services  என்ற ஸ்கைப் முகவரியூடாக பயணிகள் முறைப்பாடுகளை முன்வைக்கமுடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்