ஜனாதிபதி – விக்னேஸ்வரன் சந்திப்பு

ஜனாதிபதி – விக்னேஸ்வரன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 5:07 pm

வட மாகாண முதலாமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

வட மாகாண சபையின் நிலவுகின்ற நிர்வாக பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்த மாகாண சபையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கும், முதலமைச்சருக்கும் இடையில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம்  மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்