சோமாலியாவில் குண்டுத் தாக்குதல்; 10 பேர் பலி

சோமாலியாவில் குண்டுத் தாக்குதல்; 10 பேர் பலி

சோமாலியாவில் குண்டுத் தாக்குதல்; 10 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 12:43 pm

சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொகாடிசுவில் உள்ள பிரபல விடுதி ஒன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதல்களில் சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்றுக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சோமாலியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்