சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பிணையில் விடுதலை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பிணையில் விடுதலை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 7:53 pm

யாழ். தொண்டமனாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக கைதான 6 மீனவர்களும் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக இன்று காலை கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து இந்த மீனவர்கள் ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இந்த மீனவர்கள் தொடர்பிலான பீ அறிக்கை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான மேலதிக வழக்கு விசாரணைகளுக்காக பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 6 மீனவர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.

தொண்டமனாறு மீனவர் சங்க உறுப்பினர்களால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு மீனவர்களும் இன்று காலை மடக்கிப் பிடிக்கப்பட்டு கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மீனவர்கள் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட வலைகளால், தமது வலைகளுக்கு சேதம் ஏற்பட்டடிருப்பதாக தொண்டமனாறு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து கைதான மீனவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட வலைகளும், இரண்டு படகுகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்