சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 2:25 pm

யாழ். தொண்டமானாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களுடன் 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

தொண்டமானாறு மீனவர் சங்க உறுப்பினர்களால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 மீனவர்களும் இன்று காலை 7 மணியளவில் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட வலைகளால், தமது வலைகளுக்கு சேதம் ஏற்பட்டடிருப்பதாக தொண்டமானாறு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களால் பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட வலைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான இந்த மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்