கல்வியங்காட்டில் வாகன விபத்து; ஒருவர் பலி

கல்வியங்காட்டில் வாகன விபத்து; ஒருவர் பலி

கல்வியங்காட்டில் வாகன விபத்து; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 8:02 am

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றும், சைக்கிள் ஒன்றும் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிளில் பயணித்தவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கற்பிட்டி பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது, மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டுவிலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்