கடுவலை பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கடுவலை பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கடுவலை பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 8:50 pm

அரச கொள்கைகளை மீறி கடுவலை பிரதேச  செயலாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இன்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாலபேயில் உள்ள கடுவலை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

கடுவலை பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கடுவலை மாநகர சபை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள்  உள்ளிட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே கடுவலை பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவர்கள் மாலபே பஸ் தரிப்பிடம் வரை பேரணியாக சென்றனர்.

கடுவலை மாநாகர சபை மேயர் ஜீ.எஸ்.புத்ததாச தெரிவித்த கருத்து :-

“எங்கிருந்தோ கடுவலைக்கு வந்த அமைச்சர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்த இடமாற்றத்துக்கு நாம் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம். இது விமல் வீரவங்சவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.அழைப்பிதழ் ஒன்றில் அவரது பெயர் குறிப்பிடப்படாமையே இதற்கான காரணம்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்