உணவு ஒவ்வாமையால் 350 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையால் 350 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 10:23 am

உணவு ஒவ்வாமையால் நோய்வாய்ப்பட்ட 350க்கும் அதிகமானவர்கள் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றுபவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததால் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்