இலங்கையில் 10,250 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன – இந்திய துணைத் தூதரகம்

இலங்கையில் 10,250 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன – இந்திய துணைத் தூதரகம்

இலங்கையில் 10,250 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன – இந்திய துணைத் தூதரகம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 7:35 am

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 10,184 வீடுகளும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கடந்தாண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், இந்த வருடம் மேலும் 16,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுவதாக இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூன்றாம் கட்டம், மத்திய, ஊவா மாகாணங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான 4000 வீடுகள் நிர்மாணிக்க சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளினால் காணிகள் விடுவிக்கப்பட்டு, தேவையான காணி பண்படுத்தல் முடிவடைந்ததும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டம் இந்திய அரசின் முழுமையான மானிய உதவித் திட்டத்தின் கீழ் 30 பில்லியன் இலங்கை ரூபா செலவில் முன்னெடுக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்