இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 12:14 pm

இரண்டு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு நான்கரை கிலோகிராம் தங்கக் கட்டிகள் மூன்றை கொண்டுசெல்ல முயன்றபோது, இன்று அதிகாலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.

இயந்திரப் பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபரை கைதுசெய்த விசாரித்தபோது, பழுதடைந்த இயந்திர பாகங்களை திருத்துவதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்