மதுபோதையில் வாகனம் செலுத்திய 365 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 365 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 365 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2014 | 6:27 pm

நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 365 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்திய 119 பேரும், முச்சக்கர வண்டி சாரதிகள் 215 பேரும் இவர்களில் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 2,139 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 1,084 பேர் மதுபோதையுடன் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மதுபோதையுடன் பயணிகள் போக்குவரத்து பஸ்களை செலுத்திய எட்டு சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்