பணிகளை தயக்கமின்றி நிறைவேற்றினால் அரச பணி வலுவடையும் –  லலித் வீரதுங்க

பணிகளை தயக்கமின்றி நிறைவேற்றினால் அரச பணி வலுவடையும் – லலித் வீரதுங்க

பணிகளை தயக்கமின்றி நிறைவேற்றினால் அரச பணி வலுவடையும் – லலித் வீரதுங்க

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2014 | 6:22 pm

தராதரம் பாராது சிறந்த மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு, சகல அரச ஊழியர்களிடமும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியினர் புதிய வருடத்தின் பணிகளை இன்று ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தில் முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி செயலாளர் இதனைக் கூறினார்.

தமக்கு பொறுப்பளிக்கப்படுகின்ற சகல பணிகளையும் தயக்கமின்றி நிறைவேற்றுவதன் மூலம், அரச பணியை வலுவுடையதாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்தில் நாட்டில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திலும் ஜனாதிபதியினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, அதன் பொருட்டு அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்