ஹந்தானை மலைத்தொடரில் தீ

ஹந்தானை மலைத்தொடரில் தீ

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 7:14 pm

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு விமானப் படையின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய பெல் ஃபோ வன் ரூ ஹெலிகொப்டர் ஒன்று ஹந்தானைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மலைத்தொடரில் தீ பரவிவருவதாகவும் இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய தீயணைப்பு வாகனமொன்றை அங்கு அனுப்பிவைத்துள்ளதாக கண்டி தீ அணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிறக்கு சொந்தமான காணியிலேயே தீ பரவியுள்ளதாக கண்டி மாவட்ட வன இலாக அதிகாரி கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்