வெயாங்கொடை ரயில் விபத்து; விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு

வெயாங்கொடை ரயில் விபத்து; விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு

வெயாங்கொடை ரயில் விபத்து; விசாரணைகளுக்காக மூவரடங்கிய குழு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 7:39 pm

வெயாங்கொடை, வதுரவ பகுதியில் ரயில் என்ஜினில் தீ பரவியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவின் அறிக்கை ஒரு வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, ரயில் எஞ்சினில் தீ பரவியபோது வெளியே குதிப்பதற்கு முற்பட்டவேளை மற்றுமொரு ரயிலில் மோதி உயிரிழந்த மூவரது சடலங்களும் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதில் வறக்காபொல பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் சடலங்களும் அடங்குகின்றன.

சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்த இவர்கள் களுத்துறையில் இருந்து வறக்காபொலவிற்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இவர்களது இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

உயிரிழந்த மற்றையவர் விமானப் படை வீரராவார்.

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலின் எஞ்ஜினில் வதுரவ ரயில் நிலையத்திற்கு அருகில், நேற்று மாலை 6.50 அளவில் திடீரென தீ பரவியது.

இதேவேளை,  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்