வெயாங்கொடை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

வெயாங்கொடை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

வெயாங்கொடை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 2:07 pm

வெயாங்கொடை, வதுரவ பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயிலுக்குள் இந்த மரணம் ஏற்படவில்லை எனினும், இடம்பெற்றுள்ள சம்பவம் குறித்து கவனம் செலுத்திய பின்னர், இறுதிக் கிரியைகளுக்காக இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.ரி. ஆரியரத்ன குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக பதினையாயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில், நேற்று மாலை 6.50 அளவில் வதுரவ ரயில் நிலையத்திற்கு அருகில் என்ஜினில் திடீரென தீ பரவியதை அடுத்து ஏற்பட்ட நிலைமையே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்திருந்தது.

தீ பரவியதை அடுத்து பீதியடைந்த பயணிகள் சிலர் ரயிலில் இருந்து வெளியே குதித்தபோது, பொல்கஹாவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள்.

காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் மூவர் உயிரிழந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்