விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்; 76 பாடசாலைகள் மூடப்படும்

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்; 76 பாடசாலைகள் மூடப்படும்

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்; 76 பாடசாலைகள் மூடப்படும்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 8:20 pm

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் 76 பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம்  எட்டாம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் தொடக்கம் ஜனவரி ஏழாம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார கூறியுள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக 103 நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக 19 பாடசாலைகளில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகளில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 110 இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்