முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் புதிய திட்டம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் புதிய திட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 11:32 am

யுத்த காலப்பகுதியில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு வடமாகாண சபை நடவடிக்கை

யுத்த காலப்பகுதியில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் உபாதைக்கு உள்ளானவர்களை பராமரிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை மேற்கொண்டு வருகின்றது.

வவுனியா நெளுக்குளத்தில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் விடுதியின் திருத்த பணிகளை பார்வையிட்ட பின்னர் வட  மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரிவில் 20 கட்டில்கள் காணப்படுவதாகவும் முதல் கட்டமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 20 பேரை பராமரிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிலையத்தின் திருத்த பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளதுடன், குறுகிய விரைவில் அதனை திறப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யுத்த காலப்பகுதியில் முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளானவர்கள் இருப்பார்களாயின், ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகருடனோ அல்லது வவுனியாவில் உள்ள சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது யாழ்பாணத்தில் உள்ள அமைச்சின் காரியலத்திற்கு தொடர்புகொண்டு இந்த நிலையத்தில் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என வட  மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வட  மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்த கருத்து :-

“இந்த ஆயுர்வேத வைத்தியசாலையில் 20 பேரை பராமரிக்க கூடிய வசதி தற்போது உள்ளது.அதிகமான ஆட்கள் வந்தால் கிளிநொச்சியிலும் இதுமாதிரி அல்லது முல்லைதீவில் சென்டரை தொடங்குவதாகவும், அதற்கும் மேலதிகமான ஆட்கள் வந்தால் கட்டாயமாக மூன்றாவது சென்டர் யாழ். மாவட்டத்தில் தொடங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்