டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பதவியேற்பு

டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பதவியேற்பு

டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 2:51 pm

டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுள்ளார்.

ஏற்கனவே அறிவித்தது போன்று பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்துக்கு கெஜ்ரிவால் , மெட்ரோ ரயிலில் வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவியேற்பு விழா முடிவடைந்த பின்னர் உடனடியாக முதல்வர் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கேஜ்ரிவால் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குருவான  அண்ணா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட வாழ்த்து அனுப்பியுள்ளதாகவும்,

உடல் நலன் பாதிப்பு காரணமாக பதவியேற்பு நிகழ்விற்கு சமூகமளிக்க  முடியவில்லை என ஹசாரே தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்