சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 11:09 am

முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொற்று நோயல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதே இதன் திட்டதின் நோக்கம் என சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் நலின் டி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று நோயல்லாத நோய்களின் தன்மை அதிகரித்துச் செல்வதை கடந்த காலப்பகுதியில் அவதானிக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் மற்றும் கொள்வனவு செய்கின்ற உணவுகளில் நச்சுப்பதார்த்தங்ள் அடங்கியுள்ளமை போன்ற காரணிகளே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது என டொக்டர் நலின் டி ஹேரத் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மக்களின் முறையான உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

பாரம்பரிய பயிர்களை உணவாகக் கொள்வதே உடல் நலனுக்கும் மிகவும் சிந்ததாக அமையும் என்றும் டொக்டர் நலின் டி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்