கேகாலையில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

கேகாலையில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

கேகாலையில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 10:45 am

கேகாலை நகரில் இன்றிலிருந்து புதிய வாகனப் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டிற்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மற்றும் தேசிய சுதந்திர தின நிகழ்வு என்பவற்றை முன்னிட்டு கேகாலை நகரில் நிர்மாணப் பணிகள் துரித்தப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்று காலை 6 மணிமுதல் புதிய வாகன போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கேகாலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாகவுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகால் இடம்பறமாகவுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பண்டாநாயக்க மாவத்தையால் திரும்பி, கனத்த சந்தியால் கொழும்பு – கண்டி பிரதான வீதிக்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமைபோன்று கேகாலை நகர் ஊடாக செல்லக்கூடிய வசதி காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த புதிய வாகன போக்குவரத்து திட்டம் காரணமாக கேகாலை நகர மத்தியிலிருந்த கொழும்பு பஸ் தரிப்பிடம் தற்காலிகமாக வெலிமன்னாதொட்ட சந்திக்கு மாற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்