ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 11:57 am

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இறுதி தருணத்தில் இலங்கை 2 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில்  வெற்றியிலக்கை கடந்த இலங்கை ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது.

தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் பெற்ற 64 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

பாகிஸ்தானின் ஜுனைட் கான் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 43. 3 ஓவர்களில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 51 ஓட்டங்களை பெற்றதுடன் , பந்து வீச்சில்   லசித் மாலிங்க 4 விக்கட்டுக்களை கைப்பற்றனார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக  டினேஷ் சந்திமால் தெரிவானதுடன் , தொடரின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தானின் மொஹமட் ஹாவிஸ் தெரிவு செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்