இரணைமடு நீர் விநியோகத் திட்டத்திற்கு கிளி. விவசாயிகள் அதிருப்தி

இரணைமடு நீர் விநியோகத் திட்டத்திற்கு கிளி. விவசாயிகள் அதிருப்தி

இரணைமடு நீர் விநியோகத் திட்டத்திற்கு கிளி. விவசாயிகள் அதிருப்தி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 7:30 pm

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு  நீரை விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக கிளிநொச்சி விவசாயிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நீர்விநியோகத்  திட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று மாலை கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு    நீரை விநியோகிக்கும் திட்டத்தினால் தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட விவசாய  சம்மேளனத்திற்கும், கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்து நீரைப் பயன்படுத்தும் 21 அமைப்புக்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமது எதிர்ப்பை   எழுத்து மூலம் வெளியிடுவது குறித்து  அங்கு  விவசாயிகள் தீர்மானமொன்றையும் நிறைவேற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்