ஆந்திராவில் ரயிலில் தீ; 23 பேர் பலி

ஆந்திராவில் ரயிலில் தீ; 23 பேர் பலி

ஆந்திராவில் ரயிலில் தீ; 23 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 3:27 pm

இந்திய ஆந்திரா பிரதேஷ் பகுதியில்  ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3. 30 அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில்  உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயிலில் ஏற்பட்ட புகையின் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில்  காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை  தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை  கண்டறியப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்