அக்கரைப்பற்று அஞ்சல் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அக்கரைப்பற்று அஞ்சல் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 5:42 pm

அக்கறைப்பற்று பிரதான அஞ்சல் அலுவலக ஊழியர்கள் சிலர் இன்று இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது அஞ்சல் நிலைய பொறுப்பதிகாரி, ஊழியர்களுடன் முறைகேடாக நடந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அக்கறைப்பற்று அஞ்சல் அலுவலக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் வாசுகி அருள்ராஜ் நேற்று தீர்மானம் ஒன்றை அறிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை சேவைக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து தமது பணிப்பகிஷ்கரிப்பை ஊழியர்கள் நேற்று கைவிட்டு சேவைக்கு திரும்பியுள்ளனர்.

இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரி ஊழியர்களுடன் இன்றும் அடாவடித்தனமாக நடந்துகொண்டதாக தெரிவித்து ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டுக்கு பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஊழியர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அக்கறைப்பற்று அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரியின் கருத்தை அறிந்துகொள்வதற்காக, நியூஸ்பெஸ்ட் அவருடன் தொடர்பினை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்