48 மணித்தியாலங்களில் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி

48 மணித்தியாலங்களில் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி

48 மணித்தியாலங்களில் 546 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 12:49 pm

நத்தார் தினத்திலும், அதற்கு முன்னைய தினத்திலும் திடீர் விபத்துகளுக்கு உள்ளான 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி விபத்துகள் காரணமாக 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

வீதி விபத்துகள் மற்றும் துன்புறுத்தல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்கான 85 பேர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் சம்பா அலுத்வீர கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்