யாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம்

யாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம்

யாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 5:17 pm

யாழ். போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்களாக பணியாற்றும் பொருட்டு 168 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றது.

வைத்தியசாலையில் ஏற்கனவே கடமையாற்றிவந்த 47 பேர் உட்பட 168 பேருக்கு சிற்றூழியர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஶ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தகைமையுடைய 38 தொண்டர் ஊழியர்கள் இதுவரை தங்களின் ஆவணங்களை கையளிக்கவில்லை என்பதால் அவர்களுக்கான நிரந்தர நியமனங்களில் தாமதம் நிலவியுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

நிரந்தர சேவையில் தங்களை உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் 200 க்கும் அதிகமான தற்காலிக தொண்டர் ஊழியர்கள் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து 12 நாட்களாக தொடர்ச்சியான கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுப்பதாக பிரதேச அரசியல் வாதிகளும், உயரதிகாரிகளும்
வழங்கிய வாக்குறுதியை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொடண்டர் ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்