முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 12:29 pm

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளதாக இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நடத்தப்பட்டுவரும் பயங்கரவாத தாக்குதலுக்கு, முஸ்லிம் சகோரத்துவக் கட்சியே காரணம் என்று தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொலிஸ் தலைமையகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு முஸ்லிம் சகோரத்துவக் கட்சி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவத்தின் ஆதரவுடனான இடைக்கால அரசாங்கம், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளது.

எதிர்காலத்தில் எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இராணுவத்தால் பதவி விலக்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சியின் கட்சியே முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்