மாலபே தனியார் வங்கியில் கொள்ளை

மாலபே தனியார் வங்கியில் கொள்ளை

மாலபே தனியார் வங்கியில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 7:46 pm

மாலபேயில் தனியார் வங்கியொன்றினுள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில் வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி சுமார் 13 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படும் 2 கொள்ளையர்கள், துப்பாக்கியைக் காட்டி வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்