பாலித தெவரப்பெருமயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது

பாலித தெவரப்பெருமயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 9:33 pm

பதுரலிய பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவித்து நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை மூடப்பட்டு இன்றுடன் 6 நாட்கள் கடந்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தலைமையில் ஆரம்பமான இந்த சாகும் வரையான உண்ணாவிரப் போராட்டம் பொலிஸாரின் தலையீட்டில் கலைக்கப்பட்டது.

போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டமையினால் அவர்களை கலைக்க வேண்டி ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.

எனினும் இன்று முற்பகல் இந்தப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதற்கு தேரர்களும் ஆசி வழங்கினர்.

இதன்போது உண்ணாவிரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவர் சுகவீனமடைந்தமையினால் அவரை மற்றுமொரு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலை மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுரலிய நகரில் கடைகளும் இன்று மூடப்பட்டன.

நோயாளி ஒருவரை அழைத்து வந்த ஒருவர் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடத்ததாக தெரிவித்து கடந்த சனிக் கிழமை பதுரலிய பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டது.

அதன் பின்னர் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் களுத்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லயென அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் நபர் எம்மிடம் கூறினார்.

ஐந்து நாட்களாக மூடப்பட்டிருந்த பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று முற்பகல் தமது சீருடையுடன் சேவைக்கு சமூகமளித்துள்ளனர்.

எனினும் நோயாளிக்கு இன்றும் சிகிச்சை வழங்கப்படவில்லை.

பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ள போதிலும், ஏன் வைத்தியசாலையை திறக்கவில்லையென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

நவீன் திஸாநாயக்க தெரிவித்த கருத்து :-

“பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையை இதுவரை காண முடியவில்லை.  இவ்வாறான ஓர் சம்பவம் இதற்கு முன்னர் பதகிரிய வைத்தியசாலையில் இடம்பெற்ற போது எமது வைத்தியர்களை மீண்டும் சேவைக்கு அனுப்பினோம்.  அவர்கள் கூறும் விதத்தில் பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் திருப்தி அடைய முடியாது.  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலையை மூடிவிட்டு மாவட்ட வைத்தியர் சென்றதில்லை”

அஜித் ரோஹன தெரிவித்த கருத்து :-

“இந்த வைத்தியசாலை வளாகத்த்தில் 60 இக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அவசர தேவைக்காக வாகங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம்.  எவ்வொரு சந்தர்பத்திலும் பாதுகாப்பு வழங்க நாம் தயாராகவுள்ளொம்.  அப்பாவி நோயாளிகளைக் கருத்திக் கொண்டு வைத்தியசாலையை திறக்குமாறு நாம் கூறுகின்றோம்.”

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்