பாடசாலையில் திருட்டுச் சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

பாடசாலையில் திருட்டுச் சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

பாடசாலையில் திருட்டுச் சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 7:33 pm

மட்டக்களப்பு வாழைச்சேனை காவத்தமுனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஓட்டமாவடி, காவத்தை மற்றும் ஜெயந்தியாய ஆகிய பகுதிகளிலிருந்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையிலிருந்து திருடப்பட்ட இரண்டு கணனிகள் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள், சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி காவத்தமுனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் கணனி அறை உடைக்கப்பட்டு கணனிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தகநபர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்