பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 11:27 am

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத, அதிகளவிலான இஸட் புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் 180 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

இதற்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவம் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்