பதுரலிய வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பதுரலிய வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பதுரலிய வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 11:10 am

களுத்துறை, பதுரலிய வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு விசேட கலந்துரையாடல் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பையும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க கூறினார்.

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பதுரலிய வைத்தியசாலை மூடப்பட்டுள்ளமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலை முன்றலில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நேற்றிரவு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலித்த தெவரப்பெரும கூறினார்.

எவ்வாறாயினும், பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பினை கலைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்