நாடு முழுவதும் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள்

நாடு முழுவதும் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 2:22 pm

சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று நாடளாவிய ரீதியில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று காலை 9.25 முதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தினத்திற்கான பிரதான வைபவம் களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு தெளிவூட்டல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் நாடுபூராகவும் உயிர் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகைகளும், தெளிவூட்டல்களும்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

சுனாமியால் அதிகளவிலான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

திருகோணமலையிலும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்திலும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஞாபகார்த்த நிகழ்வு கிளிநொச்சி, யாழ். மாவட்டங்களிலும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்