தொடரை இழந்தது இலங்கை

தொடரை இழந்தது இலங்கை

தொடரை இழந்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 9:10 am

ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச  ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-1  என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற  நான்காவது    சர்வதேச   ஒரு நாள்   கிரிக்கெட்    போட்டியில்    எட்டு  விக்கட்களால்    வெற்றி பெற்ற   பாகிஸ்தான்   தொடரை   தன்வசப்படுத்தியது.

226 ஓட்டங்கள்  என்ற  வெற்றியிலக்கை     நோக்கிப்   பதிலுக்குத்   துடுப்பெடுத்தாடிய     பாகிஸ்தான்    41.1     ஓவர்களில்    2 விக்கட்களை   மாத்திரம்   இழந்து   226 ஓட்டங்களைப்   பெற்று   வெற்றியிலக்கை     கடந்தது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய முஹமட் ஹபிஸ்  ஆட்டமிழக்காமல் 113  ஓட்டங்களைப்பெற்று  வெற்றிக்கு  வழிவகுத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

அறிமுக வீரராக களமிறங்கிய அஷான் பிரியஞ்சன் 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தானின் முஹமட் ஹபிஸ் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்