தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 9:20 am

பாடசாலைகளை இலக்காகக் கொண்டு இன்றுமுதல் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நுளம்புகளின் பெருக்கம் துரிதகதியில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க குறிப்பிட்டார்.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு வருகைதரும் மாணவர்கள் நுளம்புக் கடிக்கு இலக்காகி, டெங்குத் தொற்றுக்குத் உள்ளாகும் நிலைமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறைகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதர அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்