துருக்கி அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் அறிவிப்பு

துருக்கி அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் அறிவிப்பு

துருக்கி அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 12:17 pm

அமைச்சர்கள் மூவர் இராஜினாமா செய்ததை அடுத்து துருக்கியின் பிரதமர் டையிப் எர்டோகன் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதை அடுத்து மூன்று அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில் மேலும் 10 புதிய அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்