சுனாமியின் போது மீட்கப்பட்ட 135 சடலங்கள் கராபிட்டிய வைத்தியசாலையில்

சுனாமியின் போது மீட்கப்பட்ட 135 சடலங்கள் கராபிட்டிய வைத்தியசாலையில்

சுனாமியின் போது மீட்கப்பட்ட 135 சடலங்கள் கராபிட்டிய வைத்தியசாலையில்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 10:18 pm

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 20 இற்கும் மேற்பட்ட சடலங்களை அடையாளங் கண்டுகொள்ள முடிந்தாக கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியப் பிரிவு தெரிவிக்கின்றது.

முழுமையான மற்றும் பகுதியளவிலான 135 சடலங்கள் இன்னமும் கராபிட்டிய மருத்துவ பீடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பீடத்தின் தலைவர் யூ.சி.பி பெரேரா தெரிவித்தார்.

அனர்த்தங்களின்போது உயிரிழந்தவர்களை அடையாளங் கண்டு கொள்வதற்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையால் 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரிவில் இந்த சடலங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களுடன் மீட்கப்பட்ட ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஆவணங்களையும் இன்றும் காணமுடிகின்றது.

கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவு தலைவர் யூ.சி.பி பெரேரா

“மனித விஞ்ஞானம் தொடர்பிலான ஆய்வுகளுக்காக முழுமையான மற்றும் பகுதியளவிலான 135 சடங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனர்த்தம் ஏற்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த சடலங்களை அடையாளங் காண்பதற்கான தேசிய ரீதியான திட்டமொன்று எமது நாட்டில் இல்லை”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்