சீதுவையில் வாகன விபத்து; இருவர் பலி

சீதுவையில் வாகன விபத்து; இருவர் பலி

சீதுவையில் வாகன விபத்து; இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 11:46 am

கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாது போனமையினால் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சீதுவை மற்றும் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்