காரைத்தீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

காரைத்தீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

காரைத்தீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 7:14 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திற்குட்பட்ட அம்பாறை, காரைத்தீவு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 5 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

சபைத் தவிசாளர் செல்லையா இராசையாவினால் இந்த வரவு-செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள், எதிர்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருடன் இணைந்து வரவு-செலவுத்திட்டத்திற்கு, எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று முதலாவது வாக்கெடுப்பு மாத்திரமே நடத்தப்பட்டதாகவும், இரண்டாம் வாசிப்புக்காக திருத்தங்களுடன் வரவு-செலவுத்திட்டத்தை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் காரைத்தீவு பிரதேச சபையின் தவிசாளர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்