எதனோல் கொண்டு வருவோரும் உள்ளனர் – பிரதமர்

எதனோல் கொண்டு வருவோரும் உள்ளனர் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 9:49 pm

சுனாமி பாதுகாப்பு தேசிய நிகழ்வு இன்று களுத்துறையில் நடைபெற்றது.

இதில் பிரதமர் டி.எம். ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுனாமியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இதன்போது 2 நிமிட மைளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுத்துறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிக்ழ்வு இடம்பெற்றது.

இடர் முகாமைத்துவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

“இந்த நாட்டில் மீண்டும் ஒரு தடவை சுனாமி அன்ர்த்தம் ஏற்படுமாயின் உயிர் சேதம் இன்றி மக்களை பாதுகாக்கும் திட்டமொன்று எம்மிடம் உள்ளது.அதனை நாம் பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவோம்”

இதில் கலந்து கொண்ட பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

டி.எம். ஜயரத்ன பிரதமர் தெரிவித்தார்

“தற்போது போதைப் பொருட்களை விற்போர் உள்ளனர்.  அதனை கொண்டு வருவோர் உள்ளனர்.  எதனோல் கொண்டு வருவோரும் உள்ளனர்.  அதனைப் போன்று வேறு வேறுவிதமான தவறான பொருட்களை கொண்டு வருவோரும் உள்ளனர்.  அவற்றை நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியுமான அனைத்தையும் செய்வோம். இவற்றை சட்டமாக்குவதற்கு அரசாங்கத்தினால் முடியாது”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்