இராணுவ முகா​மை படம் பிடித்த இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்

இராணுவ முகா​மை படம் பிடித்த இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்

இராணுவ முகா​மை படம் பிடித்த இந்திய பிரஜை நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 3:59 pm

கிளிநொச்சியில் இராணுவ முகாம் ஒன்றை படம் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய பிரஜையை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கை வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரே நாச்சிக்குடா பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

விசா விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதாக தமிழக இளைஞர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இவரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்