இந்திய மீனவர்கள் 110 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்திய மீனவர்கள் 110 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்திய மீனவர்கள் 110 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 7:26 pm

வடபகுதி கடலில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்கள் திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து அவர்களை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிற்கு வடக்கே செம்மலை கடற்பரப்பில் கடந்த 11 ஆம் திகதி, 110 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்ததுடன், அவர்களின் 15 படகுகளையும் பறிமுதல் செய்திருந்தனர்.

அதன் பின்னர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடம் திருகோணமலை துறைமுக பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், இன்று வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்