ஹிங்குரன்கொட பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

ஹிங்குரன்கொட பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

ஹிங்குரன்கொட பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 2:17 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிநிலவும் ஹிங்குரன்கொட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தாம் உள்ளிட்ட கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாக பிரதேச சபையின் உப தலைவர் சமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 06 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்