வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 10:43 am

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 02 தடவைகள் தோற்கடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எ.எல்.ரத்நாயக்க கூறுகின்றார்.

அதன்பிரகாரம் மீரிகம, பேலியகொடை மற்றும் கெஸ்பேவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தலைவர்களின் பெயர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரினால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குட்பட்ட 9 உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் புதிய பிரதானிகள் நியமிக்கப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்