புதிய வரியை ரத்து செய்ய கோரிக்கை

புதிய வரியை ரத்து செய்ய கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 9:08 pm

ஹோமாகம பிரதேச சபை மக்களிடமிருந்து அறவிடுவதற்காக  பரிந்துரைக்கப்பட்ட 71 புதிய வரி முறைகளை உடனடியாக ரத்து செய்யுமாறு ஹோமாகம பிரதேச சபையின் வரி செலுத்துவோர் சங்கம் தெரிவிக்கின்றது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விஜேரத்ன கமகே தலைவர் ஹோமாகம பிரதேச சபையின் வரி செலுத்துவோர் சங்கம்

“அறவிடப்படுகின்ற வரியை கொண்டு உரியவாறு செலவு செய்வார்களா? சிறந்த எதிர்காலத்திற்காக செலவு செய்வீர்களா? என்பதனை எதிர்வரும் ஆண்டில் நாம் அவதானிப்போம். உங்களது நலனுக்காக அறவிடப்படுகின்ற வரி என பதாகைகளை காட்சிப்படுத்தினால், அது முறையானதாக அமையாது. பதாகைகளை காட்சிப்படுத்தி, அவர்கள் நலனை பெற்றுக் கொள்வார்களாயின், அது பாரிய பிரச்சினையாக அமையும்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்